Menu Close

பக்தி இலக்கியம் – Tamil Literature Optional PYQs (Paper II, Unit 3)

Here are all 62 questions on பக்தி இலக்கியம் asked in UPSC Tamil Literature Optional Paper II (2009–2026), arranged under the 2 topics of this unit. Within each topic the latest questions come first.

Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

Topic-wise weightage graph of பக்தி இலக்கியம், Tamil Literature Optional Paper II
Topic-wise weightage of பக்தி இலக்கியம் (Tamil Literature Optional Paper II) – share of marks asked from each topic.

3.1] ‘திருவாசகம்’ – நீத்தல் விண்ணப்பம்

30 questions

  1. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மாணிக்கவாசகர் எவற்றையெல்லாம் நீக்க வேண்டுமென இறைவனிடம் விண்ணப்பிக்கிறார்? [2026/15m/3c]

  2. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மாணிக்கவாசகர் “கடலிளுள் நாய் நக்கியாங்கு” என எதனை உவமிக்கிறார். [2025/10m/1e]

  3. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: இறைவனின் பெருமைகளாக மாணிக்கவாசகர் சுட்டுவனவற்றை எழுதுக. [2025/15m/3c]

  4. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தனது குற்றங்களாக மாணிக்கவாசகர் தெரிவிப்பன எவை? ஏன். [2024/15m/2c]

  5. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: திருவாசகத்தில் கூறப்படும் கடவுளின் உருவ வருணனைகள் எவ்வாறானவை? ஏன்? [2024/15m/3c]

  6. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. மாணிக்கவாசகர் தன் புலன் இன்பங்களைக் குற்றமாகக் கருதுவதற்கான காரணங்களை ஆய்ந்துரைக்க. [2023/15m/2c]

  7. இறைவனிடம் மாணிக்கவாசகர் வேண்டுவன யாவை? விளக்குக. [2022/15m/2c]

  8. பின்வருவனவற்றிற்கு இடம், பொருள், நயம் முதலியவற்றை விளக்குக: பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம்
    பொய்யினையே [2022/15m/4c]

  9. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மாணிக்கவாசகர் தன் அவல நிலையை இறைவன் முன் முறையிடும் பாங்கினை எழுதுக? [2021/10m/1c]

  10. “அடற்கரிபோல் ஜம்புலன்களுக்கஞ்சி அழிந்தஎன்னை;
    விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய்”
    – கூற்றுச் சூழலை அடிக் கருத்துடன் விவரி. [2021/15m/4c]

  11. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நீத்தல் விண்ணப்பம் வேண்டி மாணிக்கவாசகர் முன் வைக்கும் வேண்டுதலை இரண்டு பாடல்கள் வழி விளக்குக. [2020/10m/1d]

  12. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மனித உடல் பற்றிய மாணிக்கவாசகரின் கருத்துகள் எவை? ஆராய்க. [2019/10m/1e]

  13. உருவ வருணனை வாயிலாக சிவபெருமான் பற்றிய புராணக் கதைகள் எவ்வாறு மாணிக்க வாசகரால் நினைவு கூறப்படுகின்றன? ஆராய்க. [2019/20m/3a]

  14. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மணிவாசகப் பெருமான் தன் அவலநிலையினை “நீத்தல் விண்ணப்பத்தில்” வெளிப்படுத்துமாற்றைத் தெரிவிக்க. [2018/15m/3c]

  15. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: உலகப்பற்றுக்கும் இறைப்பற்றுக்கும் இடையில் உள்ள தன் திண்டாட்ட நிலையை மாணிக்கவாசகர் எவ்வாறு விளக்குகிறார்? [2017/10m/1e]

  16. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: நீத்தல் விண்ணப்பத்தில் உத்தரகோச மங்கை எவ்வாறு வருணிக்கப்படுகிறது? [2017/15m/3c]

  17. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இறைவனின் பெருமைகளாக மாணிக்கவாசகர் நீத்தல் விண்ணப்பத்தில் குறிப்பிடுவனவற்றைப் புலப்படுத்துக. [2016/10m/1e]

  18. “அன்னை ஒப்பாய் எனக்கு
    அத்தன் ஒப்பாய், என் அரும்பொருளே !”
    என்று மாணிக்கவாசகர் வேண்டுவனவற்றைப் புலப்படுத்துக. [2016/20m/7a]

  19. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மாணிக்கவாசகர் தம் துன்ப நிலையை நீத்தல் விண்ணப்பத்தில் வெளிப்படுத்துமாற்றை விவரிக்க. [2015/10m/1e]

  20. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: ‘ஐம்பொறிகளும் இறைவன் இன்பத்தைக் காட்டிலும் இன்பம் செய்வது போலத் துன்பமே செய்யும்’ என்று மாணிக்கவாசகர் கருத்தை விளக்குக. [2015/20m/2a]

  21. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தம் அவல நிலையைச் சுட்ட நீத்தல் விண்ணப்பத்தில், மாணிக்க வாசகர் சுட்டும் உவமைகளுள் இரண்டினை விளக்குக. [2014/10m/1e]

  22. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– மாணிக்கவாசகர் தம் சிறுமையையும் இறைவன் பெருமையையும் எங்ஙனம் உணர்த்துகின்றார்? [2013/10m/1e]

  23. பின்வரும் பாடற் பகுதிகள் வரும் இடத்தையும், அவற்றின் பொருட் சிறப்பையும் புலப்படுத்துக:– ‘அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும்பொருளே!’ [2013/20m/4c]

  24. பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:- “ஏசினும், யான் உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதிகண்டாய்” – என்ற மணிவாசகப் பெருமானின் மணிமொழியின் மாண்பினை உரைக்க. [2012/12m/1e]

  25. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மாணிக்க வாசகர் மனிதவாழ்க்கையைப் பொறிகளும் மனமும் அலைக்கும் தன்மையை எங்ஙனம் கூறுகின்றார்? [2011/20m/1c]

  26. கீழ்க்காணும் செய்யுட் பகுதிகளில் இடம் சுட்டிப் பொருள் நலத்தையும் காட்டுக: இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து
    நினைப்பிரிந்த
    விரிதலை யேனை விடுதி கண்டாய். [2011/20m/4b]

  27. கீழ்க்காணும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இறைவன் திருவருளைத் திருப்புணையின் துணைகொண்டு, பிறவிப் பெருங்கடல் நீந்துதற்குத் தண்ணளி புரிந்து, பற்றறுதி அளித்தருள வேண்டும் என்று மனமுருகிப் பாடி அருளிய ‘நீத்தல் விண்ணப்பத்தினால்’ வெளிப்படும் மணிவாசகப் பெருமானின் பக்தித்திறத்தினைச் சுருக்கி வரைக. [2010/20m/1d]

  28. கீழ்க்காணும் பாடல்கள் வரும் இடம் சுட்டி, அவற்றுள் பொதிந்திருக்கும் பொருள் நலங்களைப் புலப்படுத்துக. “ஏசிறும், யான் உன்னை ஏத்தினும்
    என் பிழைக்கே குழைந்து
    வேசறுவேனை விடுதிகண்டாய்” [2010/20m/4a]

  29. பின்வரும் பாடல்களில் வரும் இடத்தைச் சுட்டி விளக்கி, அவற்றுள் பொருந்தியிருக்கும் பொருள் நலங்களையும் விளக்குக:- எறும்பிடை நாங்கூழ் எனப்புலனா லரிப்
    புண்டலந்த வெறுந்தமியேனை விடுதி கண்டாய். [2009/20m/4a]

  30. பின்வரும் பாடல்களில் வரும் இடத்தைச் சுட்டி விளக்கி, அவற்றுள் பொருந்தியிருக்கும் பொருள் நலங்களையும் விளக்குக:- …
    கண்டது செய்து கருணைமட்டுப்
    பருகிக் களித்து
    மிண்டு கின்றேனை. [2009/20m/4c]

Cover of the UPSC Prelims Topic-wise PYQ book with detailed explanations

From the Optional Province team

Preparing for Prelims too?

Our UPSC Prelims Topic-wise PYQ Book covers every Prelims question with detailed explanations, so you can see exactly where UPSC asks from. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

3.2] ‘திருப்பாவை’

32 questions

  1. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ‘திருப்பாவையில் இயற்கை வருணனை’ – கட்டுரை வரைக. [2026/15m/2c]

  2. இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக: “பெற்றம்மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்துநீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.” [2026/15m/4c]

  3. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஆண்டாள் கண்ணனை வர்ணிக்கும் முறைகளை விவரிக்க. [2025/15m/2c]

  4. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல். [2025/15m/4c]

  5. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: திருப்பாவைப் பாடல்கள் பெண்ணியப் பாடல்களா? [2024/10m/1b]

  6. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பாவை நோன்பின் வழி அறியலாகும் பண்பாட்டுக் கூறுகளை விளக்கு. [2024/15m/3b]

  7. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: “ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைந்த சரமழை” [2024/15m/4c]

  8. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஆயர்கள் வாழ்வு திருப்பாவையில் எவ்வாறு எடுத்துரைக்கப்படுகிறது? [2023/10m/1e]

  9. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. திருமாலின் உருவத்தை ஆண்டால் வருணிக்கும் திறத்தை விரித்துரைக்க. [2023/15m/3c]

  10. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மழையை ஆண்டாள் எவ்வாறு பாடுகிறார்? [2022/10m/1e]

  11. காதலால் கடவுளை அடையலாம் என்று காட்டியவர் ஆண்டாள் என்னும் கருத்தினை ஆராய்க. [2022/20m/3a]

  12. பாவை நோன்பின் பயன்கள் யாவை? விளக்கு. [2021/15m/3b]

  13. “தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
    ஆவா என்று ஆராய்ந்து அருள் …”
    – கூற்றுச் சூழலை அடிக் கருத்துடன் விவரி. [2021/15m/4b]

  14. திருப்பாவையில் பொதிந்து கிடக்கும் தமிழ் அழகியல் கூறுகளை வெளிப்படுத்துக. [2020/15m/2b]

  15. கிழ்க்காணும் பாடலடிகளின் இடம், பொருள் மற்றும் நயத்தையும் விளக்குக: “கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
    வெள்ளத்து அரவிந் துயில் அமர்ந்த வித்தினை” [2020/20m/4a]

  16. காலை நேரம் திருப்பாவையில் எவ்வாறு வருணிக்கப்படுகிறது? விளக்குக. [2019/15m/2c]

  17. கிழ்க்காணும் பாடலடிகளின் இடத்தையும் நயத்தையும் விளக்குக: “ஏற்றக் கலங்கள் எதிர்பொங்கி மீது அளிப்ப
    மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்” [2019/20m/4a]

  18. கீழ்க் காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: திருப்பாவையில் காணப்படும் திருமாலின் தனிச் சிறப்புகளை எடுத்துக் கூறுக. [2018/10m/1e]

  19. கீழ்வரும் பாடப்பகுதிகள் பயிலும் இடத்தையும், அவற்றின் இலக்கிய நயத்தையும் வெளிப்படுத்துக: “மை இட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்று ஓதோம்”. [2018/15m/4b]

  20. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: திருமாலின் அவதாரச் சிறப்புகள் திருப்பாவையில் எவ்வாறு விவரிக்கப்படுகின்றன? ஏன்? [2017/15m/2c]

  21. கீழ்க்காணும் பாடல் அடிகளுக்கு இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக: “செந்தாமரைக் கையால் சீர்ஆர் வளை ஒலிப்ப
    வந்து திறவாய் மகிழ்ந்து” [2017/20m/4a]

  22. “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி” ஆண்டாள் உணர்த்தும் செய்திகளைப் புலப்படுத்துக. [2016/15m/3b]

  23. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: பத்தி உணர்வுக்கும் பாலியல் சிந்தனைக்கும் உள்ள உறவை ஆண்டாளின் திருப்பாவை வழிநின்று விளக்குக. [2015/15m/3b]

  24. கீழ்வரும் பாடற்பகுதிகள் பயிலும் இடத்தையும் அவற்றின் இலக்கிய நயத்தையும் வெளிப்படுத்துக: ‘கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?’ [2015/15m/4c]

  25. பாவை நோன்பு நோற்பதால் உண்டாகும் உலகப் பயன்களாக ஆண்டாள் கூறுவன யாவை? [2014/20m/3c]

  26. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– பாவை நோன்பு நோற்கும் நெறியையும், அதனாற் பெறும் பயன்களையும் திருப்பாவை கொண்டு காட்டுக. [2013/20m/3c]

  27. பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பாவை நோன்பை மேற்கொள்வதன் மூலம் ஆய்ச்சியர் கண்ணபிரானிடம் பெற்ற இன்பத்தை ஆண்டாள் கூறியுள்ள திறத்தை வரைக [2012/20m/3b]

  28. திருப்பாவை வழி வெளிப்படும் இயற்கை வருணனைச் சிறப்புகளைப் புலப்படுத்துக. [2011/30m/3b]

  29. கீழ்க்காணும் செய்யுட் பகுதிகளில் இடம் சுட்டிப் பொருள் நலத்தையும் காட்டுக: வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
    புள்ளும் சிலம்பின காண். [2011/20m/4c]

  30. கீழ்க்காணும் பாடல்கள் வரும் இடம் சுட்டி, அவற்றுள் பொதிந்திருக்கும் பொருள் நலங்களைப் புலப்படுத்துக. “எற்றைக்கும், ஏழ் ஏழ் பிறவிக்கும்,
    உன்தன்னோடு
    உற்றோமே ஆவோம்; உனக்கே நாம்
    ஆட் செய்வோம்” [2010/20m/4b]

  31. கீழ்க்காணும் பாடல்கள் வரும் இடம் சுட்டி, அவற்றுள் பொதிந்திருக்கும் பொருள் நலங்களைப் புலப்படுத்துக. “எம் பெருமான் ! நந்தகோபாலா !
    எழுந்திராய் !
    எம் பெருமாட்டி ! யசோதாய் ! அறிவுறாய் !
    உம்பர் கோமானே ! உறங்காது
    எழுந்திராய் !” [2010/20m/4c]

  32. பின்வரும் பாடல்களில் வரும் இடத்தைச் சுட்டி விளக்கி, அவற்றுள் பொருந்தியிருக்கும் பொருள் நலங்களையும் விளக்குக:- தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்த
    தூமம் கமழத் துயில் அணைமேல் கண்வளரும்
    மாமான் மகளே! [2009/20m/4b]

Cover of the UPSC Mains Topic-wise and Year-wise PYQs book (2013–2026)

From the Optional Province team

Strengthen your GS papers

Our UPSC Mains Topic-wise & Year-wise PYQ Book (2013–2026) maps every GS question to the syllabus, so you know what UPSC asks and how often. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

Spotted an error? Tell us.

We classify every PYQ with care, but mistakes can slip in. If a question is in the wrong topic, has a typo, the wrong year, or is missing, let us know. We review every report and update the page.

Report an Error

« Previous: காப்பிய இலக்கியம் · Next: நவீன இலக்கியம்: கவிதையும் உரைநடையும் »

Back to: Tamil Literature Optional PYQs – Topic-wise

Last updated: 2 November 2026