Here are all 76 questions on காப்பிய இலக்கியம் asked in UPSC Tamil Literature Optional Paper II (2009–2026), arranged under the 2 topics of this unit. Within each topic the latest questions come first.
Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

2.1] ‘சிலப்பதிகாரம்’ – மதுரைக் காண்டம்
43 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கடக்களி றடக்கிய கருணை மறவன் கோவலன் என்பதை இளங்கோவடிகள் எவ்வாறு பதிவு செய்கிறார்? [2026/10m/1d]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மதுரை மாநகரின் மாண்பினையும் அமைப்பினையும் சிலப்பதிகாரத்தின் வழி விவரித்துரைக்க. [2026/20m/2a]
இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக: “என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்.” [2026/15m/4a]பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கோவலன் அரசனின் பொற்கொல்லனை எதன்வழி அறிந்தான். [2025/10m/1c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: அழற்படுகாதை காட்டும் மதுரையின் நிலையினை விளக்குக. [2025/15m/3b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை. [2025/20m/4b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கண்ணகியின் பெண்மை வழக்குரை காதையில் எவ்வாறு வெளிப்படுகிறது? [2024/10m/1e]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: “போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல்
என்பன போல் மறித்துக் கைகாட்ட” [2024/20m/4a]பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: துன்பமாலையில் கண்ணகியின் அவலம் எவ்வாறு விவரிக்கப்படுகிறது? [2023/10m/1c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. பாண்டிய மன்னனின் நற்பண்புகளாக இளங்கோவடிகள் கூறுவன வற்றைத் தொகுத்துரைக்க. [2023/15m/2b]
பின்வருவனவற்றிற்கு இடம், பொருள், நயம் தருக: “அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக் கொளல் வேண்டும்.” [2023/15m/4b]பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இளங்கோவடிகள் வையையைத் தற்குறிப்பேற்றம் அமைய எங்ஙனம் காட்சிப்படுத்துகிறார். [2022/10m/1c]
இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் மதுரை நகரின் அமைப்பு குறித்து எழுதுக. [2022/15m/3b]
பின்வருவனவற்றிற்கு இடம், பொருள், நயம் முதலியவற்றை விளக்குக: அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும் [2022/20m/4a]கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சிலப்பதிகாரத்தில் ஆயர் வாழ்வு எவ்வாறு வருணிக்கப்படுகிறது? [2021/10m/1d]
வையை நதி மற்றும் மதுரைக் கோட்டை வாயில் வருணனையில் காணும் உள்ளுறைச் செய்திகளை எழுதுக. [2021/15m/2b]
மாதவி கோவலனுக்கு எழுதிய முடங்கலின் சிறப்பினை எடுத்துரைக்க. [2020/20m/2a]
கண்ணகி தனது வழக்குரையில் கூறிய நீதி நுட்பங்களை எடுத்துரைக்க. [2020/20m/3a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கோவலனின் கடந்த கால வாழ்வு குறித்து மாடல மறையோன் தெரிவிக்கும் கருத்துகள் எவை? [2019/10m/1c]
இளங்கோ வருணிக்கும் மதுரை நகரின் அமைப்பு எவ்வாறானது? விளக்குக. [2019/15m/2b]
கீழ்க் காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சிலப்பதிகாரப் பெருங்காப்பியத்தில் இடம் பெறும் வழக்குரை காதையின் தனித்தன்மையைக் கூறுக. [2018/10m/1d]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சிலப்பதிகாரப் ‘புறஞ்சேரியிறுத்த காதை’ பெருங்காப்பியக்கதைப் போக்கிற்கு உதவும் பான்மையினை விளக்கியுரைக்க. [2018/20m/3a]
கீழ்வரும் பாடப்பகுதிகள் பயிலும் இடத்தையும், அவற்றின் இலக்கிய நயத்தையும் வெளிப்படுத்துக: “கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்”. [2018/15m/4c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மதுரைக் காண்டத்தில் பேசப்படும் பெண் தெய்வங்களின் இயல்புகளை விவரிக்க. [2017/10m/1c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: இளங்கோவடிகள் புலப்படுத்தும் அரசின் செயல்பாடுகள் எவை? விளக்குக. [2017/20m/3a]
சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை கூறும் ஆய மகளிர் செயல்களை விளக்குக. [2016/15m/2b]
சிலம்பில் வேட்டுவவரி உணர்த்தும் பண்பாட்டு வாழ்வியல் நிகழ்வுகளை விவரி. [2016/20m/3a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: பொற்கொல்லன் சூழ்ச்சியும் கோவலன் வீழ்ச்சியும் குறித்து விவரிக்க. [2015/20m/3a]
கீழ்வரும் பாடற்பகுதிகள் பயிலும் இடத்தையும் அவற்றின் இலக்கிய நயத்தையும் வெளிப்படுத்துக: ‘வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்’ [2015/20m/4a]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சிலப்பதிகாரம் – அடைக்கலக் காதையில் சமயப் பொதுமை எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது? [2014/10m/1c]
கவுந்தி அடிகளாரின் பண்பு நலன்களை விளக்குக. [2014/15m/3a]
பின்வரும் பாடற்பகுதிகள் வரும் இடத்தையும் அவற்றின் பொருட்சிறப்பையும் புலப்படுத்துக. ‘கற்புக் கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்.’ [2014/15m/4b]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– சிலப்பதிகார ‘வேட்டுவவரி’ நிகழ்ச்சிகள் வழி வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துரைக்க. [2013/15m/2b]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– மாங்காட்டு அந்தணன் கோவலனிடம் உனரத்த செய்திகளைக் ‘காடு காண் காதை’ வழி நின்று கூறுக. [2013/15m/3a]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:- சிலம்பில், வழக்கும், தீர்ப்பும் அமைந்துள்ள பாங்கினைத் தெளிவுபடுத்துக. [2012/12m/1d]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அவலத்தலைவனின் புகழ்பாடுவது (Praising the tragic hero) காப்பிய உத்திகளுள் ஒன்று என்பதைச் சிலம்பு அடைக்கலக்காதை வழி நிறுவுக. [2012/20m/3c]
பின் வரும் பாடல்களில் வரும் இடத்தைச் சுட்டி, அவற்றுள் பொருந்தியிருக்கும் பொருள் நலங்களையும், 250 சொற்களுக்கு மிகாமல் விளக்கி வரைக: “கீழ்த் திசை வாயில் கணவனொரு புகுந்தேன், மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு”. [2012/20m/4c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சிலப்பதிகாரப் புறஞ் சேரியிறுத்த காதை காப்பியக் கதைப் போக்கிற்கு உதவும் தன்மையினை விளக்குக. [2011/20m/1b]
கீழ்க்காணும் செய்யுட் பகுதிகளில் இடம் சுட்டிப் பொருள் நலத்தையும் காட்டுக: இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று
அறிவிப்பாயே, அறிவிப்பாயே. [2011/20m/4a]கீழ்க்காணும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘வேட்டுவவரியின்’ தனிச்சிறப்புக்களைக் கூறுக. [2010/20m/1c]
‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரப் பெருங்காப்பியத்திற்கு மெருகூட்டிய காண்டங்களில் சிறந்து நிற்பது மதுரைக்காண்டமே’ என்னும் பொருள் பற்றி ஆராய்க. [2010/60m/3]
பின்வரும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் இருநூறு சொற்களுக்கு மிகாமல் விடை தருக:- அரச குடும்பத் தலைமையினின்று மாறி, குடிமக்கள் காப்பியம் ஆகச் சிலப்பதிகாரம் படைக்கப்பட்டுள்ளது என்பதற்கான சான்றுகளைக் கண்ண்கி பாத்திரப் படைப்பைக் கொண்டு நிறுவுக. [2009/20m/1d]
சிலப்பதிகாரம் சமயப் பொதுமைக் காப்பியம் என்பதை மதுரைக் காண்டம் கொண்டு நிறுவுக. [2009/60m/3]
2.2] ‘கம்பராமாயணம்’ – கும்பகருணன் வதைப் படலம்
33 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம் செய்துவிட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன்’ எனக் கும்பகர்ணன் கூறக் காரணம் யாது? [2026/10m/1e]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: கும்பகர்ணனின் நன்றி மறவாத் தகைமையைப் புலப்படுத்துக. [2026/15m/3b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இலக்குவனின் போர்த்திறனைக் கும்பகர்ண்ன் எவ்வாறு புகழ்கிறான். [2025/10m/1d]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: போரில் இராமனுக்கும் கும்பகர்ணனுக்கும் நிகழ்ந்த உரையாடல்களை விவரிக்க. [2025/20m/2a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இராவணன் தூதர்களுக்கு விட்ட கட்டளையும் அதன் விளைவுகளும் யாவை? விளக்குக. [2024/10m/1c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: கும்பகர்ணன், இராமன் ஆகிய இருவருக்கும் இடையில் நிகழ்ந்த போரினைக் கம்பர் எவ்வாறு விவரிக்கிறார்? [2024/20m/2a]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: “கும்பிட்டு வாழ்கிலேன்; யான்
கூற்றையும் ஆடல் கொண்டேன்” [2024/15m/4b]பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கும்பகருணன் வதைப் படலத்தில் பேசப்படும் போர்க் கருவிகள் யாவை? [2023/10m/1d]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. போர்புரிகிறவர்கள் விரிவாக உரையாடிக் கொள்வதற்கான காரணத்தைக் கம்பராமாயணத்தின் வழி விவரிக்க. [2023/15m/3b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இராவணன் பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப் புக்கதேன்? விளக்குக. [2022/10m/1d]
கும்பகருணனின் பண்புநலன்களைப் புலப்படுத்துக. [2022/20m/2a]
கும்பகருணனுக்கும் சுக்கிரிவனுக்கும் நிகழும் போரினை விவரி? [2021/15m/2c]
செஞ்சோற்றுக் கடன் கழித்த செம்மலாக கும்பகருணனின் பாத்திரப்படைப்பு எவ்வாறு சிறப்பிக்கப்பட்டுள்ளது? [2021/20m/3a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கும்பகருணனை எழுப்பச் சென்ற கிங்கிரர் வெகுளியால் கூறுவனவற்றை எடுத்துரைக்க. [2020/10m/1c]
கிழ்க்காணும் பாடலடிகளின் இடம், பொருள் மற்றும் நயத்தையும் விளக்குக: “கூற்றமும் நின்றது, எம்மைக்
கொல்லிய விதியும் நின்ற” [2020/15m/4c]கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கும்ப கருணன் வதைப் படலத்தில் பேசப்படும் அறச்சிக்கல்களும் அவற்றிற்கான தீர்வுகளும் எவை? விளக்குக. [2019/10m/1d]
கும்பகருணன் வதைப் படலத்தில் மகோதரன் என்ற பாத்திரம் பெறும் முக்கியத்துவம் யாது? விளக்குக. [2019/15m/3b]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: வீடணனின் பண்புநலன்களை விளக்குக. [2018/20m/2a]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நன்றி ததும்பும் பாத்திரமாகக் கும்பகருணன் படைக்கப்பட்டுள்ளமையைச் சான்று வழி நிறுவுக. [2018/15m/3b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குற்றமும் தண்டனையும் கும்பகர்ணன் வதைப்படலத்தில் எவ்வாறு மையக் கருத்தாக இருக்கிறது? விளக்குக. [2017/10m/1d]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: கும்பகர்ணன் துயில் எழுப்பப்பட்ட நிகழ்வுகள் எவ்வாறு வருணிக்கப்படுகின்றன? [2017/20m/2a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கும்பகர்ணன் இராமனிடம் கூறிய சினமொழிகளை எடுத்துரைக்க. [2016/10m/1d]
அற உள்ளம் கொண்டவன் கும்பகர்ணன் என்பதை விவரி. [2016/15m/3c]
கீழ்வரும் பாடற்பகுதிகள் பயிலும் இடத்தையும் அவற்றின் இலக்கிய நயத்தையும் விவரி: “வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்.” [2016/15m/4c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இராமபிரான் கும்பகருணனிடம் எழுப்பிய வினாக்களையும் கும்பகருணன் கூறிய பதிலையும் தொகுத்துரைக்க. [2015/10m/1d]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: ‘செஞ்சோற்றுக் கடன்தீர்த்த அறவோன் கும்பகருணன்’. ஆராய்க. [2015/15m/3c]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கும்ப கருணன் வதைப்படலத்தில் வரும் வீடணனின் பண்பு நலன்களை விளக்குக. [2014/10m/1d]
கும்ப கருணன், செஞ் சோற்றுக் கடன் கழித்த செம்மல் என்பது எவ்வாறு பொருந்தும்? [2014/15m/3b]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– கும்பகருணன் வீடணன் அழைப்புக்கு இணங்காத நிலைக்குரிய காரணங்களைக் காட்டுக. [2013/10m/1d]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– கும்பகருணன் அறவோன் என்பதை அவன் உனரவழி உணர்த்துக. [2013/15m/3b]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நன்றியுணர்வு ததும்பும் பாத்திரமாகக் கும்பகருணன் படைக்கப்பட்டுள்ள பான்மையினைப் புலப்படுத்துக. [2012/20m/3a]
கும்பகருணன் தன் உடன்பிறந்தார் மீது கொண்ட பேரன்பினைப் புலப்படுத்துக. [2011/30m/3a]
‘கவிதையிற் பெரியவன் கம்பன்’ என்பதைக் கம்பனின் கும்பகருண வதைப் படலம் கொண்டு சான்று காட்டி நிலை நாட்டுக. [2009/60m/2]
« Previous: பண்டைய இலக்கியம் · Next: பக்தி இலக்கியம் »
Back to: Tamil Literature Optional PYQs – Topic-wise
Last updated: 2 November 2026

