Menu Close

பண்டைய இலக்கியம் – Tamil Literature Optional PYQs (Paper II, Unit 1)

Here are all 101 questions on பண்டைய இலக்கியம் asked in UPSC Tamil Literature Optional Paper II (2009–2026), arranged under the 3 topics of this unit. Within each topic the latest questions come first.

Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

Topic-wise weightage graph of பண்டைய இலக்கியம், Tamil Literature Optional Paper II
Topic-wise weightage of பண்டைய இலக்கியம் (Tamil Literature Optional Paper II) – share of marks asked from each topic.

1.1] ‘குறுந்தொகை’ (1–25 பாடல்கள்)

34 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே’ – விளக்குக. [2026/10m/1b]

  2. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: காமஞ்சேர் குளத்தாரின் தலைவி நெஞ்சு நோவதற்கான காரணமாகச் சுட்டுவனவற்றை எழுதுக. [2025/10m/1b]

  3. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: உலைக்கல் அன்ன பாறை ஏறிக் கொடுவில் எயினர் பகழி மாய்க்கும். [2025/15m/4a]

  4. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: குறுந்தொகையில் கூறப்பட்டுள்ள மாந்தர்களின் உணர்வுகளை விளக்கு. [2024/15m/2b]

  5. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. குறுந்தொகையில் பேசப்படும் பரத்தமை ஒழுக்கதினை மதிப்பிடுக. [2023/20m/2a]

  6. பின்வருவனவற்றிற்கு இடம், பொருள், நயம் தருக: “தண்ணம் துறைவன் கொடுமை
    நம்முன் நாணிக் கரப்பாடும் மே” [2023/20m/4a]

  7. குறுந்தொகையில் இடம்பெறும் வரலாற்றுக் குறிப்புகளை விளக்குக. [2022/15m/2b]

  8. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தலைவியின் பிரிவுத்துயர் குறுந்தொகையில் உவமை நயத்தோடு எவ்விதம் கூறப்படுகிறது? [2021/10m/1a]

  9. “உகிர் நுதி புரட்டும் ஓசை போலச்
    செங்கால் பல்லி தன் துணை பயிறும் …”
    – கூற்றுச் சூழலை அடிக் கருத்துடன் விவரி. [2021/20m/4a]

  10. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குறிஞ்சித் திணையின் நில அடையாளம் யாது? இரண்டு குறுந்தொகைப் பாடல்கள் வழி அவ்வடையாளம் வெளிப்படுவதைக் காட்டுக. [2020/10m/1a]

  11. குறுந்தொகைப் பாலைத்திணையில் தலைவி மற்றும் தோழி எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள். [2020/15m/3c]

  12. கிழ்க்காணும் பாடலடிகளின் இடம், பொருள் மற்றும் நயத்தையும் விளக்குக: “மடைமாண் செப்பில் தமிய வைகிய
    பொய்யாப் பூவின் மெய் சாயினளே” [2020/15m/4b]

  13. குறுந்தொகையில் பேசப்படும் தாவரங்கள் எவை? அவை ஏன் பேசப்படுகின்றன? ஆராய்க. [2019/20m/2a]

  14. கிழ்க்காணும் பாடலடிகளின் இடத்தையும் நயத்தையும் விளக்குக: “சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி ஆங்கு” [2019/15m/4c]

  15. கீழ்க் காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குறுந்தொகையில் காணப்படும் தோழி கூற்றுப்பாடல்களின் தனிச் சிறப்பைத் தெளிவுபடுத்துக. [2018/10m/1a]

  16. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நாடனொடு தலைவிக்கு உள்ள நட்பை தேவகுலத்தார் எவ்வாறு வருணிக்கிறார்? [2018/15m/2b]

  17. கீழ்வரும் பாடப்பகுதிகள் பயிலும் இடத்தையும், அவற்றின் இலக்கிய நயத்தையும் வெளிப்படுத்துக: “காமம் செப்பாது கண்டது மொழிமோ”. [2018/20m/4a]

  18. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பிரிவு ஒழுக்கம் குறுந்தொகையில் எவ்வாறு பேசப்படுகிறது? [2017/10m/1a]

  19. கீழ்க்காணும் பாடல் அடிகளுக்கு இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக: “இன்னும் பாடுக பாட்டே, அவர்
    நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே” [2017/15m/4c]

  20. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: “எழுகுளிறு மிதித்த ஒரு பழம்; பெருந்தேன் – இழைக்கும் நாடன்; நல்வோள் கணவன் இவன்” ஆகிய தொடர்களைக் குறுந்தொகை கொண்டு விளக்குக. [2016/10m/1a]

  21. குறிஞ்சித்திணையில் கபிலர் உணர்த்தும் செய்திகளைக் குறுந்தொகைவழி விவரி. [2016/20m/2a]

  22. கீழ்வரும் பாடற்பகுதிகள் பயிலும் இடத்தையும் அவற்றின் இலக்கிய நயத்தையும் விவரி: “கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல.” [2016/15m/4b]

  23. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தோழி அறத்தொடு நிற்றல் குறித்து ஔவையார் கூறும் குறுந்தொகைப் பாடல் கருத்தைப் புலப்படுத்துக. [2015/10m/1a]

  24. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: ‘இவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே’ என முடியும் குறுந்கொகைச் செய்யுளில் பொதிந்துள்ள உள்ளுறையை விவரிக்க. [2015/15m/2c]

  25. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குறுந்தொகையில் காணப்படும் தோழி கூற்றுப் பாடல்கள் நயம் மிக்கனவாயத் திகழ்வதை, நும் பாடப்பகுதியிலிருந்து, ஏதேனும் இரு சான்றுகள் வழி புலப்படுத்துக. [2014/10m/1a]

  26. குறுந்தொகைப் பாடல்களில் புலப்படும் தமிழர்தம் பண்பாட்டுச் சிறப்புகளை விளக்குக. [2014/20m/2c]

  27. பின்வரும் பாடற்பகுதிகள் வரும் இடத்தையும் அவற்றின் பொருட்சிறப்பையும் புலப்படுத்துக. ‘சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு.’ [2014/15m/4a]

  28. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– புதல்வன் தாய், நாலூர்க் கோசர், உயிர் தவச்சிறிது, ஆரல் பார்க்கும் குருகு ஆகிய தொடர்களைக் குறுந்தொகை கொண்டு விளக்குக. [2013/10m/1a]

  29. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– குறுந்தொகைப் பாடல்களில் காணப்பெறும் உவமைச் சிறப்பை எடுத்துக்காட்டுகளால் விளக்குக. [2013/15m/2a]

  30. பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:- இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு ஏற்பட்டு நின்ற தலைவன், தலைவியின் நாணத்தை நீக்குதற்பொருட்டுப் புனைந்துரைத்தல் என்பதை விளக்குக. [2012/12m/1a]

  31. பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மனவலிமையும், உலக அனுபவமும் நிறைந்த பேராற்றல் படைத்தவளாக – தலைவியின் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளி விளக்காகத் திகழும் தோழியின் தனித்தன்மைகளைக் குறுந்கொகைப் பாடல் வழி சுருக்கிக் கூறுக. [2012/20m/2a]

  32. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குறுந்தொகையில் இடம்பெறும் தலைவி கூற்றுச் செய்யுட்களில் வெளிப்படும் பிரிவுத்துயரையும், அதனை வெளிப்படுத்தும் தலைவியின் திறனையும் புலப்படுத்துக. [2011/20m/1a]

  33. கீழ்க்காணும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: “தலைவன் தலைவியரிடையே அரும்பும் காதல் மலர்ந்து, காய்ந்துக்கனிதற்குத் தோழி உறுதுணையாகிறாள்.” குறுந்தொகைப் பாடல்கள் வழி இக்கூற்றை விளக்குக. [2010/20m/1a]

  34. பின்வரும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் இருநூறு சொற்களுக்கு மிகாமல் விடை தருக:- குறுந்தொகையில் ‘வேரல் வேலி’ எனத் தொடங்கும் கபிலர்தம் செய்யுளில் முதல், கரு, உரிப் பொருள்கள் பொருந்தியிருக்கும் அழகை விவரிக்க. [2009/20m/1a]

Cover of the UPSC Prelims Topic-wise PYQ book with detailed explanations

From the Optional Province team

Preparing for Prelims too?

Our UPSC Prelims Topic-wise PYQ Book covers every Prelims question with detailed explanations, so you can see exactly where UPSC asks from. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

1.2] ‘புறநானூறு’ (182–200 பாடல்கள்)

34 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கல்வியினால் வரும் சிறப்புகளை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எங்ஙனம் உணர்த்துகிறான்? [2026/10m/1a]

  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: வாழ்வின் நிலையாமையைப் புறநானூற்றுப் பாடல்களின் வழி நிறுவுக. [2026/15m/2b]

  3. இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக: “நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
    முறைவழிப் படூஉம்.” [2026/20m/4b]

  4. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: உலகம் இருப்பதற்கான காரணங்களாகக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி சுட்டுவன யாவை? [2025/10m/1a]

  5. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பிசிராந்தையார் அறிவுடை நம்பிக்குச் செவியறிவுறுத்தும் கருத்துகளின் சிறப்பினை வெளிப்படுத்துக. [2025/15m/2b]

  6. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: உலகப் பொது அறங்களைப் புறநானூற்றுப் புலவர்கள் எவ்வாறு விளக்கியுள்ளனர்? [2024/10m/1d]

  7. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மக்கட்பேறு பாண்டியன் அறிவுடை நம்பியின் பாடலில் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? [2024/20m/3a]

  8. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பற்றி வண்ணக்கன் பேரி சாத்தனார் கூறுவன யாவை? [2023/10m/1a]

  9. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. பரிசில் பெறாத ஆவூர் மூலங்கிழார் தன் உள்ளக் குமுறலை எவ்வாறு புலப்படுத்துகிறார்? [2023/20m/3a]

  10. பின்வருவனவற்றிற்கு இடம், பொருள், நயம் தருக: “உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; பிறவும் எல்லாம்
    ஓரொக்கும்மே.” [2023/15m/4c]

  11. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் “செல்வத்துப் பயனே ஈதல்” என்று எதனால் வலியுறுத்துகிறார். [2022/10m/1a]

  12. சோழன் நல்லுருத்திரன் இயற்றிய புறநானூற்றுப் பாடலின் திணை, துறைகளை விளக்கி அப்பாடலின் சிறப்பை மதிப்பிடுக. [2022/15m/3c]

  13. பின்வருவனவற்றிற்கு இடம், பொருள், நயம் முதலியவற்றை விளக்குக: யானை புக்க புலம்போலத்
    தானும் உண்ணான் உலகமும் கெடுமே [2022/15m/4b]

  14. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நல்லாற்றுப்படூஉம் நெறியாக நரிவெரூஉத்தலையார் கூறுவன யாவை? [2021/10m/1b]

  15. வேந்தனின் கடமைகளை மோசிகீரனாரும் அரசாளும் முறையை இளந்திரையனாரும் எவ்வாறு கூறியுள்ளனர்? [2021/20m/2a]

  16. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பொருண்மொழிக் காஞ்சி என்றால் என்ன? நும் பாடப்பகுதி கொண்டு விளக்குக. [2020/10m/1b]

  17. பாரி மகளிரை விச்சிக்கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் கூற்றை விவரிக்க. [2020/15m/2c]

  18. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கொடைப் பண்பு குறித்துப் புற நானூறு தெரிவிக்கும் கருத்துகள் எவை? விளக்குக. [2019/10m/1a]

  19. கிழ்க்காணும் பாடலடிகளின் இடத்தையும் நயத்தையும் விளக்குக: “நல்லது செய்தல் ஆற்றீராயினும்
    அல்லது செய்தல் ஓம்புமின்” [2019/15m/4b]

  20. கீழ்க் காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கு என முயலுநர் உண்மையானே” – இப்பாடல் உணர்த்தும் பண்பாட்டுப் பேருண்மையைப்[?] புலப்படுத்துக. [2018/10m/1b]

  21. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் பிசிராந்தையார் சொன்ன அறிவுரைகள் எவை? [2017/15m/2b]

  22. கீழ்க்காணும் பாடல் அடிகளுக்கு இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக: “கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல்” [2017/15m/4b]

  23. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: “அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” என்பதை ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றின்வழி ஆராய்க. [2016/10m/1b]

  24. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் கூற்றை விவரிக்க. [2015/10m/1b]

  25. கீழ்வரும் பாடற்பகுதிகள் பயிலும் இடத்தையும் அவற்றின் இலக்கிய நயத்தையும் வெளிப்படுத்துக: ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ [2015/15m/4b]

  26. புறுநானூற்றுப் பாடல்களில் காணும் உலகப் பார்வைகளை விளக்குக. [2014/15m/2a]

  27. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– ஆருயிர் முறைவழிப் படுமென்பதைக் கணியன் பூங்குன்றனார் காட்டுமாறு காட்டுக. [2013/10m/1b]

  28. பின்வரும் பாடற் பகுதிகள் வரும் இடத்தையும், அவற்றின் பொருட் சிறப்பையும் புலப்படுத்துக:– ‘மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.’ [2013/15m/4a]

  29. பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:- “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கு என முயலுநர் உண்மையானே” – இப்பாடல் உணர்த்தும் பண்பாட்டுப் பேருண்மையைக் குறிப்பிடுக. [2012/12m/1b]

  30. பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: புறநானூற்றுப் பாடாண் திணைப் பாடல்களின் சிறப்பியல் புகளை எடுத்துக் கூறுக. [2012/20m/2b]

  31. பின் வரும் பாடல்களில் வரும் இடத்தைச் சுட்டி, அவற்றுள் பொருந்தியிருக்கும் பொருள் நலங்களையும், 250 சொற்களுக்கு மிகாமல் விளக்கி வரைக: “இன்னாது அம்ம இவ்வுலகம்”. [2012/20m/4b]

  32. புறநானூற்றில் பொதுவியல் திணைப்பாடல்கள் உணர்த்தும் வாழ்வியல் பண்புகளை எடுத்துக்காட்டுக. [2011/30m/2a]

  33. கீழ்க்காணும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: புறநாறூற்றுப் பாடாண் திணைப்பாடல்களின் கட்டமைப்பினையும், அவை உணர்த்தும் பண்பாட்டுப் பேருண்மைகளையும் சுருக்கி வரைக. [2010/20m/1b]

  34. பின்வரும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் இருநூறு சொற்களுக்கு மிகாமல் விடை தருக:- ஓர் இலட்சிய ஊர் எப்படி இருத்தல் வேண்டும் என்பதைப் புறநானூற்றில் இடம் பெற்றுள்ள ‘யாண்டு பல’ எனும் பிசிராந்தையார் பாடலைக் கொண்டு வரையறுத்துக் காட்டுக. [2009/20m/1b]

1.3] ‘திருக்குறள்’ – பொருட்பால்

33 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பெரியாரைத் துணைக்கோடலின் மேன்மையை வள்ளுவர் வழி வகுத்துரைக்க. [2026/10m/1c]

  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: அரசர்க்கு வேண்டிய நிர்வாக மேலாண்மையை வள்ளுவர் வழி நின்று தொகுத்துரைக்க. [2026/20m/3a]

  3. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: காலமும் இடமும் அறிந்து ஒரு செயலைச் செய்ய வேண்டியதன் தேவையைத் திருக்குறள்வழி விளக்குக. [2025/20m/3a]

  4. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மன்னனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் எவை என்று திருக்குறள் கூறுகிறது? [2024/10m/1a]

  5. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: காலம் அறிந்து செயலாற்றுமாறு வள்ளுவர் ஏன் வலியுறுத்து கிறார்? [2023/10m/1b]

  6. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அரசனுக்கு இருக்க வேண்டிய மாண்புகளைத் திருக்குறள்வழி விளக்குக. [2022/10m/1b]

  7. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: வினைசெயல் வகை அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்து வரைக. [2021/10m/1e]

  8. அமைச்சரின் இலக்கணமாக வள்ளுவர் கூறுவன யாவை? [2021/15m/3c]

  9. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தெய்வப் புலவர் கடை அறிவுடைமையின் தனித்தன்மைளை விளக்குக. [2020/10m/1e]

  10. திருக்குறள் கூறும் மேலாண்மையியல் சிந்தனைகளை நும் பாடப்பகுதிக் கொண்டு விளக்குக. [2020/15m/3b]

  11. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: செங்கோன்மை பற்றிய குறள் கருத்துகளைத் தொகுத்து மதிப்பிடுக. [2019/10m/1b]

  12. குற்றங் கடிதல் பற்றி வள்ளுவர் தெரிவிக்கும் கருத்துகள் எவை? விளக்குக. [2019/15m/3c]

  13. கீழ்க் காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘ஊக்கமுடைமை’ என்னும் அதிகாரத்தின் வழிக்குறளாசான் உணர்த்துவனவற்றைக் குறிப்பிடுக. [2018/10m/1c]

  14. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தெய்வப்புலவர் உணர்த்தும் ‘கல்வி’யின் அருமை பெருமைகளை எடுத்துக் காட்டுக. [2018/15m/2c]

  15. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அமைச்சருக்கு மொழித்திறன் எவ்வாறு அமைய வேண்டும் என்று வள்ளுவர் தெரிவிக்கிறார்? [2017/10m/1b]

  16. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: அரசியலில் ஒற்றறிதலின் இன்றியமையாமையை வள்ளுவர் எவ்வாறு விளக்குகிறார்? [2017/15m/3b]

  17. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: “காலம் அறிந்து செயின், தீரா இடும்பைத் தரும்; உள்ளத்து அனையது உயர்வு” ஆகியன உணர்த்தும் செய்திகளைச் சுட்டுக. [2016/10m/1c]

  18. திருக்குறள் உணர்த்தும் அவையறிதலை விளக்குக. [2016/15m/2c]

  19. “சொல்வன்மை” எனும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவனவற்றை விவரி. [2016/15m/6b]

  20. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: திருக்குறள் உணர்த்தும் வலியறிதலை விளக்குக. [2015/10m/1c]

  21. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: அமைச்சன் இயல்பு குறித்து திருவள்ளுவர் கூறும் கருத்துகளை விவரிக்க. [2015/15m/2b]

  22. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தெய்வப் புலவர் கண்ட அறிவுடைமையின் தனித் தன்மைகளைக் சுட்டுக. [2014/10m/1b]

  23. திருக்குறளில் காணும் மேலாண்மை சார்ந்த சிந்தனைகளைச் சுட்டுக. [2014/15m/2b]

  24. பின்வரும் பாடற்பகுதிகள் வரும் இடத்தையும் அவற்றின் பொருட்சிறப்பையும் புலப்படுத்துக. ‘பசுமண் கலத்துள் நீர் பெய்திரீஇ யற்று.’ [2014/20m/4c]

  25. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– திருக் குறளில் மணற்கேணி, பீலிபெய் சாகாடு, வெள்ளத்தனைய மலர் நீட்டம், இணர் ஊழ்த்தும் நாறா மலர் ஆகியன உவமைகளாகக் கூறப்பெறும் நுட்பத்தை விளக்குக. [2013/10m/1c]

  26. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– ‘செங்கோன்மை’ என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அரசனின் ஆட்சி பற்றிக் கூறுவன யாவை? [2013/20m/2c]

  27. பின்வரும் பாடற் பகுதிகள் வரும் இடத்தையும், அவற்றின் பொருட் சிறப்பையும் புலப்படுத்துக:– ‘பகல் வெல்லும் கூகையைக் காக்கை’. [2013/15m/4b]

  28. பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:- “அறிவு அற்றம் காக்கும் கருவி”யாகச் செயல்படும் முறைமையினை வள்ளுவம் எங்ஙனம் புலப்படுத்துகின்றது? [2012/12m/1c]

  29. பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: “ஆள்வினை உடைமை” என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் உணர்த்தும் செய்திகளைச் சுருக்கி வரைக. [2012/20m/2c]

  30. பின் வரும் பாடல்களில் வரும் இடத்தைச் சுட்டி, அவற்றுள் பொருந்தியிருக்கும் பொருள் நலங்களையும், 250 சொற்களுக்கு மிகாமல் விளக்கி வரைக: “மக்கட்கு இறையென்று வைக்கப்படும்”. [2012/20m/4a]

  31. அரசனுக்காகும் பண்புகளையும் ஆகாப் பண்புகளையும் திருவள்ளுவர் கூறும் பாங்கினை விளக்குக. [2011/30m/2b]

  32. திருக்குறள் ஓர் ஒப்பற்ற அரசியல் நுணுக்கக் களஞ்சியமாக ஒளிர்வதைச் சான்றுகளுடன் நிறுவுக. [2010/60m/2]

  33. பின்வரும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் இருநூறு சொற்களுக்கு மிகாமல் விடை தருக:- ‘மனித இன நடத்தைகளைச் சமுதாயமே தீர்மானிக்கிறது’ என்பதைத் திருவள்ளுவர்தம் ‘சிற்றிமை சேராமை’ எனும் அதிகாரத்தைக் கொண்டு விளக்குக. [2009/20m/1c]

Cover of the UPSC Mains Topic-wise and Year-wise PYQs book (2013–2026)

From the Optional Province team

Strengthen your GS papers

Our UPSC Mains Topic-wise & Year-wise PYQ Book (2013–2026) maps every GS question to the syllabus, so you know what UPSC asks and how often. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

Spotted an error? Tell us.

We classify every PYQ with care, but mistakes can slip in. If a question is in the wrong topic, has a typo, the wrong year, or is missing, let us know. We review every report and update the page.

Report an Error

« Previous: தமிழரின் பண்பாட்டு மரபு · Next: காப்பிய இலக்கியம் »

Back to: Tamil Literature Optional PYQs – Topic-wise

Last updated: 2 November 2026