Here are all 62 questions on நாவல், சிறுகதை, நாடகம் asked in UPSC Tamil Literature Optional Paper II (2009–2026), arranged under the 3 topics of this unit. Within each topic the latest questions come first.
Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

5.1] அகிலன்
26 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அகிலனின் சித்திரப்பாவையில் ஆனந்தி பாத்திரத்தின் பண்பினைச் சித்திரிக்க. [2026/10m/5c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பெண்களுக்கு எதிரான பழமைவாதங்களைச் சித்திரப் பாவை வழி கட்டுரைக்க. [2026/15m/8a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஆனந்தி அண்ணாமலைக்குக் கொடுத்த நூலில் இருந்தவை யாவை? [2025/10m/5c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஓவியக் கலை குறித்து அகிலன் குறிப்பிடுவனவற்றை எழுதுக. [2025/15m/8b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அகிலனின் கலைத் துறைக் கருத்துகளை விளக்கு. [2024/10m/5e]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கதாநாயகன் – வில்லன் என்ற காவிய மரபு சித்திரப்பாவையில் எவ்வாறு புனையப்பட்டுள்ளது? [2023/10m/5c]
அனைத்து வினாக்களுக்கும் விடையளி. மாணிக்கம் – ஆனந்தி என்ற இருவருக்கிடையிலான உறவு எவ்வாறு அகிலனால் விவரிக்கப்படுகிறது? [2023/15m/8b]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அண்ணாமலையின் அப்பாவித்தனத்தை அகிலன் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? [2022/10m/5c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘சித்திரப்பாவை’ நாவல் ஒவியக்கலை அழிந்து வருவதை எப்படிச் சித்தரிக்கிறது? [2021/10m/5c]
‘சித்திரப்பாவை’யில் கையாளப்பட்டிருக்கும் பெண்ணியச் சிந்தனைகளை விளக்குக. [2020/20m/7a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: எதிர்ப்பண்புப் பாத்திரங்களை அகிலன் எவ்வாறு படைத்துள்ளார்? விளக்குக. [2019/10m/5c]
காதல் உறவின் தன்மைகள் சித்திரப் பாவையில் எவ்வாறு பேசப்படுகின்றன? விளக்குக. [2019/15m/8b]
கீழ்க் காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘சித்திரப்பாவையில்’ வரும் அண்ணாமலையின் பண்புநலன்கள் யாவை? [2018/10m/5e]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மாறி வரும் சமுதாய நடைமுறைகளை அகிலன் எவ்வாறு எடுத்துக் காட்டுகின்றார்? [2018/15m/8c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஓவியக் கலைக்கும் வணிகத்திற்கும் இடையிலான தொடர்பு அகிலனால் எவ்வாறு சித்திரிக்கப்படுகிறது? [2017/10m/5c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சித்திரப்பாவையில் சுந்தரி எனும் பாத்திரப்படைப்பினை விளக்குக. [2016/10m/5c]
சித்திரப்பாவையின் பாத்திரப் படைப்புகளின் சிறப்பினைத் தொகுத்துரைக்க. [2016/15m/8c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சித்திரப்பாவையில் வரும் ஆனந்தியின் பண்பு நலன்களை விளக்குக. [2015/10m/5c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: அகிலனின் சமுதாயப் பார்வையைச் ‘சித்திரப்பாவை’ வழி விவரிக்க. [2015/15m/7b]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்ககும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சித்திரப்பாவையில் வரும் அண்ணாமலையின் பண்பு நலன்களைச் சுட்டுக. [2014/10m/5d]
மாறிவரும் சமுதாய நடைமுறைகளைச் சித்திரப்பாவை ஆசிரியர் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? [2014/20m/7c]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– சித்திரப்பாவையில் இடம் பெறும் அண்ணாமலை, ஆனந்தி என்னும் இருவர் பண்பு நலன்களை வரைக. [2013/15m/7a]
பின் வருய வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சித்திரப் பாவையால் புலனாரும் சமூக நிலையினைத் தெளிவுபடுத்துக. [2012/20m/7a]
சித்திரப்பாவையில் இடம் பெறும் அண்ணாமலை, மாணிக்கம், ஆனந்தி ஆகிய கதைமாந்தரின் உருவாக்கம் குறித்துத் திறனாய்வு செய்க. [2011/30m/8a]
நாவலின் அடிப்படையாக, நாவலாசிரியன் சமுதாயத்துக்கு வெளியிடும் செய்தி அமைந்திருக்க வேண்டும். சமுதாயத்துக்குச் செய்தி இல்லாத நாவல், எலும்பில்லாத சதைப்பிண்டம் போன்றது’ என்னும் அகிலனின் கருத்தை, அவரது ‘சித்திரப்பாவை’ வழி நின்று ஆராய்க. [2010/60m/7]
அகிலனும் ஜெயகாந்தனும் நவீனப் படைப்புலகின் இரு தூண்கள் என்பதைத் தெளிவுபடுத்துக. [2009/60m/7]
5.2] ஜெயகாந்தன்
21 questions
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஜெயகாந்தனின் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள மனித வாழ்க்கையின் யதார்த்தச் சூழல்களை விவரிக்க. [2026/20m/6a]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஜெயகாந்தனின் எழுத்துகள் “மனிதர்களின் நடவடிக்கைகளைக் கேலி செய்கின்றன” என்பதைக் குருபீடம் சிறுகதைத் தொகுப்பினைக் கொண்டு விளக்குக. [2025/20m/7b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஜெயகாந்தன் சிறுகதைகள் சமகாலத் தமிழ்ச் சமூகத்தை எவ்வாறு பதிவு செய்கின்றன? [2024/20m/6a]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: வர்க்கப்பார்வை ஜெயசாந்தன் சிறுகதைகளில் எவ்வாறு புலப்படுகிறது? [2023/10m/5d]
குரு – சீடன் உரையாடல்வழி ஜெயகாந்தன் உணர்த்துவன யாவை? [2022/15m/6b]
ஜெயகாந்தன் சிறுகதைகளின் உவமைச் சிறப்பை விளக்குக. [2022/15m/7b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஜெயகாந்தன் சிறுகதைகளின் மொழி நடையினை ஆராய்க? [2021/10m/5e]
ஜெயகாந்தன் சிறுகதைகளில் மையக் கருத்துகளாக இருப்பவை எவை? விளக்கு. [2021/15m/7c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பிச்சைக்காரனின் தோற்றத்தையும் இயல்பையும் ஜெயகாந்தன் எவ்வாறு வருணிக்கிறார்? [2020/10m/5c]
ஒரு பிச்சைக்காரன் குருவான கதையை ஜெயகாந்தன் எவ்வாறு எடுத்துரைக்கிறார்? [2020/15m/8b]
நிக்கி என்ற நாய் மூலம் பொருளாதார – வர்க்க வேறுபாடுகள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றன? [2019/15m/7b]
ஆன்மீகம் சிறுகதைப் பொருளாகியுள்ளதை குருபீடம் கதைகள் கொண்டு விளக்குக. [2019/15m/8c]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நல்ல சிறுகதைக்குச் சான்றாக “தவறுகள் குற்றங்கள் அல்ல” திகழ்வதை விவரிக்க. [2018/20m/6a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: பெண்ணுடனான உறவில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதைக் குருபீடம் சிறுகதைகள் எவ்வாறு புலப்படுத்துகின்றன? [2017/15m/8b]
மானுடச்சிந்தனைகளை ஜெயகாந்தன் பதிவு செய்துள்ளதை குருபீடம் சிறுகதை ஒன்றின்வழி விவரி. [2016/20m/6a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: ஜெயகாந்தனின் சமுகக் கண்ணோட்டத்தைக் ‘குருபீடம்’ சிறுகதைத் தொகுப்பு வழி விவரிக்க. [2015/20m/6a]
சமூகச் சிக்கல்களை ஆழமாகப் பதிவு செய்வதில் ஜெயகாந்தன் வல்லவர் என்பதைக் குருபீடத்தில் வரும் ஒரு சிறுகதை கொண்டு விளக்குக. [2014/15m/8a]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– ‘அந்த உயிலின் மரணம்’ என்ற சிறுகதை உணர்த்தும் வாழ்க்கை நுட்பங்களை எடுத்துரைக்க. [2013/15m/7b]
பின் வருய வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நல்ல சிறுகதைக்குச் சான்றாக் குரூபீடம் திகழ்வதைக் கூறுக. [2012/20m/7b]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை எழுதுக: கிராம வாழ்க்கையிலும் நகர வாழ்க்கையிலும் காணும் வேறுபாடுகளைக் குருபீடம் நூலில் ஜெயகாந்தன் எவ்வாறு படம்பிடித்துக் காட்டுகிறார்? [2011/20m/5b]
அகிலனும் ஜெயகாந்தனும் நவீனப் படைப்புலகின் இரு தூண்கள் என்பதைத் தெளிவுபடுத்துக. [2009/60m/7]
5.3] சோ
16 questions
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: யாருக்கும் வெட்கமில்லை நாடகத்தின் மொழிநடை குறித்து எழுதுக. [2025/15m/6b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சோ சமூக விமர்சனத்தை யாருக்கும் வெட்கமில்லை நாடகத்தின் வழி எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? [2024/10m/5d]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: யாருக்கும் வெட்கமில்லை நாடகம் உணர்த்தும் குடும்பம் குறித்த மதிப்பீடுகள் எவை? விளக்கு. [2024/15m/8c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. பாலியல் தொழிலைச் சமூகமே உருவாக்குகிறது என்ற கருத்தைச் சோ எவ்வாறு நிறுவுகிறார்? [2023/15m/7b]
யாருக்கும் வெட்கமில்லைவழி வெளிப்படும் எள்ளல் சுவையை விளக்குக. [2022/20m/8a]
‘யாருக்கும் வெட்கமில்லை’ எனும் நாடகத்தில் சோ யாரைச் சாடுகிறார்? ஏன்? [2021/15m/8c]
‘யாருக்கும் வெட்கமில்லை’ நாடகத்தில் வெளிப்படும் நகைச்சுவை உணர்வை விவரிக்க. [2020/20m/6a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மதங்களைக் கடந்து குடும்ப நலன்களும் சமூக நலன்களும் காக்கப்படுவது ‘யாருக்கும் வெட்கமில்லை’ நாடகத்தில் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது? விளக்குக. [2019/10m/5d]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நாடக ஆசிரியர் ‘சோ’வின் சமுதாயக் கண்ணோட்டத்தைக் குறிப்பிடுக. [2018/15m/6b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நன்றிக்கும் உரிமைக்கும் உரியதாக ராவுத்தர் பாத்திரம் சோ-வால் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது? [2017/10m/5d]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: பிரமீளா மீண்டும் குடும்ப வாழ்வுக்குத் திரும்புவதற்குச் சமூகம் செய்யும் முயற்சிகள் எவை? விளக்குக. [2017/15m/6c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: சமுதாயமே ஒருவரின் அவல வாழ்வுக்குக் காரணம் என்பதை ‘யாருக்கும் வெட்கமில்லை’ நாடகம் வழிநின்று விளக்குக. [2015/15m/6b]
‘யாருக்கும் வெட்கமில்லை’ என்னும் நாடகத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் அங்கதங்களைச் சுட்டுக. [2014/15m/8b]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– யாருக்கும் வெட்கமில்லை நாடகம் காட்டும் பிரமிளாவின் அவல வாழ்வுக்குச் சமுதாயமே காரணமாவதைத் தெளிவுறுத்துக. [2013/20m/7c]
பின் வருய வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தேசமும், மக்களும் அமுது கொண்டே இருக்கும்போது, சிரித்து மகிழச் சந்தர்ப்பம் தரும் நாடகமாக “யாருக்கும் வெட்கமில்லை” விளங்குவதை நிறுவுக. [2012/20m/7c]
பின்வரும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை எழுதுக: ஒரு நல்ல அங்கத நாடகத்திற்குரிய பண்புகள் அனைத்தும், சோவின் ‘யாருக்கும் வெட்கமில்லை’ என்னும் படைப்பில் அமைந்துள்ளனவா? விளக்குக. [2010/20m/5c]
« Previous: நவீன இலக்கியம்: கவிதையும் உரைநடையும் · Next: நாட்டுப்புற இலக்கியம் »
Back to: Tamil Literature Optional PYQs – Topic-wise
Last updated: 2 November 2026

