Here are all 52 questions on நாட்டுப்புற இலக்கியம் asked in UPSC Tamil Literature Optional Paper II (2009–2026), arranged under the 2 topics of this unit. Within each topic the latest questions come first.
Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

6.1] ‘முத்துப்பட்டன் கதை’ (பதி. நா. வானமாமலை)
24 questions
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: முத்துப்பட்டனின் இயல்புகளை ஆராய்க. [2026/15m/6b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சமூக உறவுகளின் வலிமையை முத்துப்பட்டன் கதைப்பாடல் வெளிப்படுத்துமாற்றை ஆய்ந்துரைக்க. [2026/20m/8c]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: வாலப்பகடை முத்துப்பட்டனுக்கு விதித்த நிபந்தனைகள் யாவை? [2025/10m/5e]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: முத்துப்பட்டன் கதை காட்டும் சாதிய முரண்பாடுகளை எழுதுக. [2025/15m/7c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: முத்துப்பட்டன் கதைப்பாடல் ஒரு தலித் இலக்கியமா? விவாதி. [2024/15m/6b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஆநிரை கவர்தல், மீட்டல் என்ற போர்மரபு முத்துப்பட்டன் கதைப்பாடவில் இடம்பெற்றுள்ள முறையை விளக்கு. [2024/20m/8a]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: வாலப் பகடை தன் தொழிலை வலியுறுத்துவதற்கான காரணங்கள் யாவை? [2023/10m/5e]
அனைத்து வினாக்களுக்கும் விடையளி. உடன்கட்டை ஏறும் மரபு முத்துப்பட்டன் கதையில் இடம்பெற்றதற்கான பண்பாட்டுப் பின்னணிகளை ஆராய்க. [2023/15m/8c]
முத்துப்பட்டனின் ஆளுமைகளை மதிப்பிடுக. [2022/20m/7a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: முத்துப்பட்டனின் திருமணம் சமூகத் தடைகளை மீறி எவ்வாறு நிகந்தேறியது? [2021/10m/5d]
முத்துப்பட்டன் கதையில் காணும் நாட்டுப்புற வழக்காறுகளை ஆராய்க. [2021/20m/7a]
‘முத்துப்பட்டன் கதை’ வெளிப்படுத்தும் சமூகப் புரட்சிச் சிந்தனைகளை வெளிப்படுத்துக. [2020/15m/6b]
ஆநிரை கவர்தலும் ஆநிரை மீட்டலும் என்ற தமிழர் போர் மரபு முத்துப்பட்டன் கதைப்பாடலில் எவ்வாறு பொருந்துகிறது? விளக்குக. [2019/15m/6c]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: முத்துப்பட்டன் பாத்திரப்படைப்பு தெரிவிக்கும் செய்திகள் யாவை? [2018/15m/6c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: வருணம் மற்றும் சாதிப் பிரிவினைகள் முத்துப்பட்டன் கதையில் எவ்வாறு பதிவாகியுள்ளன? [2017/15m/7c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: முத்துப்பட்டன் கதை உணர்த்தும் மானுட நெறியினை விளக்குக. [2016/10m/5b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நாட்டுப்புறத் தெய்வங்களின் உருவாக்கத்தை முத்துப்பட்டன் கதை வழிநின்று விவரிக்க. [2015/10m/5e]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: முத்துப்பட்டன் கதை வெளிப்படுத்தும் சமூக முரண் குறித்து ஆராய்க. [2015/15m/8c]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்ககும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: முத்துப்பட்டன் கதையில் காணும் புரட்சிப் போக்குகளைத் தெளிவு செய்க. [2014/10m/5e]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– சீர்திருத்தச் சுவடே இல்லாமல் இருந்த பிற்போக்குச் சமுதாயத்தை முத்துப்பட்டன் காட்டுவதை விளக்குக. [2013/15m/8a]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: முத்துப்பட்டன் பாத்திரப்படைப்பு மிகத் தெளிவாக அமைந்துள்ள திறத்தைச் சுட்டுக. [2012/20m/8a]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை எழுதுக: முக்குப்பட்டன் கதைவழி வெளிப்படும் சமுதாயச் சீர்கேடுகளைத் தெளிவு செய்க. [2011/20m/5c]
பின்வரும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை எழுதுக: முத்துப் பட்டன் கதைப்பாடலின் பாடுபொருளின் தனிச்சிறப்பை எடுத்துக்காட்டுக. [2010/20m/5d]
நாட்டார் பாட்டியலில் கி.வா.ஜ., நா.வானமாமலை ஆகியோர்தம் பங்களிப்பை மதிப்பீடு செய்க. [2009/60m/8]
6.2] ‘மலையருவி’ (பதி. கி. வா. ஜகந்நாதன்)
29 questions
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மலை அருவி நாட்டுப்புறப் பாடல்களில் பதிவாகியுள்ள பழக்க வழக்கங்களை விளம்புக. [2026/15m/6c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மலையருவித் தொழிலாளர் பாடல்களின் பொருண்மையினைப் பகிர்க. [2026/15m/8b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மலையருவியின் தாலாட்டுப் பாடல்கள் காட்டும் உறவுமுறைகள் குறித்து எழுதுக. [2025/15m/6c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: கும்மிப்பாடல் புலப்படுத்தும் மகளிர் உணர்வுகளை எழுதுக. [2025/20m/8c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மக்களின் வறுமை மலையருவியில் எவ்வாறு படம்பிடித்துக் காட்டப்படுகிறது? விவரி. [2024/20m/7a]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: முறைப்பெண்ணுக்கும் மாமனுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் நாட்டுப்புறப் பாடலாவது எவ்வாறு? [2024/15m/8b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. தெம்மாங்குப் பாட்டின் உள்ளடக்கங்களைத் தொகுத்து விளக்குக. [2023/15m/6c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. தமிழரின் நாட்டுப்புற இசை மரபுகளை விவரிக்க. [2023/15m/7c]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மலையருவிவழி அறியலாகும் தாலாட்டுப் பாடலின் பொது இயல்புகளைப் புலப்படுத்துக. [2022/10m/5d]
மலையருவியில் தாது வருடப் பஞ்சம் எங்ஙனம் வெளிப்பட்டுள்ளது. [2022/15m/6c]
நாட்டுப்புறப் பாடல்களில் பழமொழிகள் ஆளப்படும் பான்மையினை மலையருவிவழிநின்று விளக்குக. [2022/15m/8c]
‘சுண்டெலிப் பெண்ணே’ என விளித்து ‘மலையருவி’ யில் பெண்ணுக்குக் கூறும் அறிவுரைகள் யாவை? [2021/15m/6c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழக நாட்டுப்புற நம்பிக்கைகள் வழி அறியலாகும் தமிழர் அறிவியல் அறிவு மரபை வெளிப்படுத்துக. [2020/10m/5e]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மாடுகள் பாடுபொருளாக இருப்பதை நாட்டுப்புறப் பாடல்கள் கொண்டு விவரி? [2019/10m/5e]
நாட்டுப்புறப் பாடல்களில் அவலச்சுவை இடம் பெறுவதற்கான சூழல்கள் எவை? விளக்குக. [2019/15m/7c]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தொழிலாளர் பாடல்களின் சிறப்பை கி.வா.ஜ. எங்ஙனம் காட்டுவின்றார்? [2018/15m/7c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: திருட்டு நாட்டுப்புறப் பாடல்களில் எவ்வாறு பதிவாகியுள்ளது? [2017/10m/5e]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: மாமன் உறவு நாட்டுப்புறப் பாடல்களில் எவ்வாறு பேசப்படுகிறது? [2017/15m/8c]
மலையருவி காட்டும் தாலாட்டுப் பாடல்களின் சிறப்பினை விவரி. [2016/15m/8b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தாலாட்டுப் பாடல்களில் இடம் பெறும் அறுவடைச் செய்திகளைப் புலப்படுத்துக. [2015/10m/5b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: தொழிலாளர் பாடல்களின் அமைப்பும் சிறப்பும் குறித்து ‘மலையருவி’ வழிநின்று விவரிக்க. [2015/15m/6c]
மலையருவியில், ஒப்பாரிப் பாடல்கள்வழிப் பெறப்படும் பண்பாட்டுக் கூறுகளைச் சுட்டுக. [2014/20m/8c]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– தொழிலாளர் பாடல்களின் சிறப்பை மலையருவி கொண்டு காட்டுக. [2013/15m/8b]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– சிறுவர் உலகம் குறித்த மலையருவிப் பாடல்களின் சிறப்புகளை எடுத்துரைக்க. [2013/20m/8c]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: “ஜம்புலிங்கம் புகழ்”, “மலையருவியில்” குறிப்பிடத்தக்க பகுதியாகத் திகழ்வதை நிறுவுக. [2012/20m/8b]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: “மலையருவியில்” காணப்படும் தாலாட்டுப் பாடல்களின் சிறப்பியல்புகளைப் புலப்படுத்துக. [2012/20m/8c]
மலையருவியில் வெளிப்படும் கிராமியப் பண்புநலன்களை வெளிக்காட்டுக. [2011/30m/8b]
இயற்கைச் சூழ்நிலையில் கட்டுப்பாடின்று, காட்டுமலராகவும், மலையருவியாகவும் உணரச்சி வசப்பட்டு மக்கள் பாடிய பாடல்களாக கி.வ.ஜ., தொகுத்தளித்த ‘மலையருவி’ விளங்குவதைச் சான்றுகளுடன் விளக்கிக் கூறுக. [2010/60m/8]
நாட்டார் பாட்டியலில் கி.வா.ஜ., நா.வானமாமலை ஆகியோர்தம் பங்களிப்பை மதிப்பீடு செய்க. [2009/60m/8]
« Previous: நாவல், சிறுகதை, நாடகம் · Next: Other questions »
Back to: Tamil Literature Optional PYQs – Topic-wise
Last updated: 2 November 2026

